Tamil Movie Ads News and Videos Portal

ருத்ரன்- விமர்சனம்

ராகவா லாரன்ஸ் படம் என்றால், பார்த்தே ஆகவேண்டும் என்று குடும்பங்கள் குழந்தைகள் எல்லாம் ரெடியாக நிற்பார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு நியாயம் சேர்த்திருக்கிறதா ருத்ரன்?

எம்.ஜி.ஆர் காலத்து கதையை எழுதி, அதை சுறா காலத்து ஸ்டைலில் எடுத்து, இந்தக்காலத்துல கொடுத்தா..ஆடியன்ஸ் நீங்க எந்தக் காலத்து ஆளுய்யா தான் கேட்பாங்க. ருத்ரனில் அந்த சோகம் நடந்ததுள்ளது நண்பர்களே..

குடும்பத்தைக் கொன்றவர்களை கொடூரமாக கொலை செய்து பழி தீர்க்கும் கதையே ருத்ரன்.

நடிப்பதை விட அடிப்பதே மேல் என முடிவு கட்டி இந்தப் படத்திற்குள் வந்திருக்கிறார் லாரன்ஸ். இடைவேளைக்கு முன்பாகவே கிட்டத்தட்ட எல்லோரையும் அடித்து விடுகிறார். இடைவேளைக்குப் பிறகு எங்கு அடிக்க ஆளில்லாமல் நம்மை அடித்து விடுவாரோ என்ற பயமே வந்துவிட்டது. சரத்குமார், பிரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்கியராஜ் உள்பட எல்லோர் நடிப்பிலும் பிடிப்பே இல்லை. காரணம் கேரக்டர் ஸ்கெட்ச் அவ்வளவு வீக்

ஜி.வி பிரகாஷ் இசையில் பாடல்கள் பின்னணி இசை இரண்டிலுமே பெரிய பாசிட்டிவ் இல்லை. ஒளிப்பதிவு மட்டும் படத்தில் ப்ளீச் ரகம். குறிப்பாக சண்டைக்காட்சிகள், பாடல் காட்சிகளை நன்றாக படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர். ஸ்டண்ட் மாஸ்டர் தான் கிட்டத்தட்ட படத்தை மொத்தமாக தாங்கியுள்ளார். அவரது உழைப்பு ஒவ்வொரு பைட்டிலும் தெரிகிறது

மிகப்பழைய கதையாக இருந்தாலும் அதைத் தகுந்த ஐடியாக்களோடு புதிய திரைக்கதையாக மாற்றினால் நிச்சயமாக ரசிகர்களை ஈர்க்கவே செய்யும். ஆனால் ருத்ரன் காட்சி அமைப்புகளிலும் திரைக்கதைப் பின்னலிலும் கோரத் தாண்டவம் ஆடியிருக்கிறார். So sad
வெறும் ஆக்‌ஷன் மட்டுமே போதும் என்பவர்களுக்குத் தான் ருத்ரன் விருந்து. மற்றவர்களுக்கு….?
2/5
-மு.ஜெகன் கவிராஜ்

#Rudhran