பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில் ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கின்றனர்.
படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பலரின் கவனத்தை ஈர்த்த இப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டும் வகையில் வீரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர்.
ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு நடன இயக்குனராக ஶ்ரீதர் பணியாற்றியுள்ளார்.“ருத்ரன்” படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.