Tamil Movie Ads News and Videos Portal

RRR- விமர்சனம்

2.30 மணிநேரப்படமோ, 3 மணி நேரப்படமோ ரசிகனை ரன்னிங் டைம் பத்தி யோசிக்கவே விடாமல் தியேட்டர்ல கட்டிப்போடுறது தான் இயக்குநர் ராஜமெளலி ஸ்டைல். மாவீரன், பாகுபலி, பாகுபலி2 என பிரம்மாண்ட உதாரணங்கள் நிறைய சொல்லலாம்.
RRR படத்திலும் அந்த மேஜிக் நடந்திருக்குதா?

கொத்துப்புரோட்டோ போட்டு, அதில் கோழிக்கறி சேர்த்து, பலமுறை குதறி எடுத்த கதை தான் இப்படத்தின் கதையும். பட் நல்ல சினிமான்றதை திரைக்கதை தானே தீர்மானிக்கும்.. காட்டு இனத்தின் காவலனான ஜுனியர் என்.டி.ஆருக்கு, பிரிட்டிஷார் கொண்டு போன மல்லி என்ற சிறுமியை மீட்கணும். பிரிட்டிஷ் போலீஸ் படையில் இருக்கும் இந்திய அதிகாரி ராம்சரணுக்கு தேச விடுதலைக்காக பிரிட்டிஷ் ராணுவத்திடம் இருந்தே ஆயுதங்களை கடத்தணும். இருவரும் எதிர்பாரா நேரத்தில் நட்பாகி, பின் பிரிந்து, மீண்டும் இணைந்து பிரிட்டிஷ் படையை பந்தாடுவது தான் மொத்தக்கதையும். இவற்றை எல்லாம் எப்படிச் செய்தார்கள் என்பதில் மேஜிக்கும் இருக்கிறது..லாஜிக்கும் சிரிக்கிறது

ஜுனியர் என்.டி.ஆர் ஆக்‌ஷன் காட்சிகளில் மட்டும் அல்ல…எமோஷ்னல் காட்சிகளிலும் அட்டகாசமாக ஸ்கோர் செய்கிறார். உடலை வறுத்தி ஒன்னாம் நம்பர் காட்டுப்பயல் போல் தன்னை முழுமையாக இயக்குநரிடம் ஒப்படைத்திருக்கும் அந்த நேர்மைக்கு வந்தனம் வைக்கலாம். ராம்சரண் அடிக்கும் அடியில் இடியோசை கேட்கும் போல..மிரட்டலாக மெர்சல் பண்ணியிருக்கிறார். இவர்கள் இருவரைத் தவிர வேறுயாரும் ஸ்கோர் பண்ணவில்லை என்பது தவறு..பண்ண கதையில் இடமில்லை என்பதே சரி

பிரம்மாண்டத்தில் படம் எக்குறையும் வைக்கவில்லை. முக்கியமாக இண்டெர்வல் ப்ளாக் சீக்வென்ஸ் நிச்சயமாக உலகத்தரம். அதேபோல் க்ளைமாக்ஸ் பைட்டும். சிஜி க்ளைமாக்ஸில் மட்டும் கொஞ்சம் பல்லைக்காட்டுகிறது. மத்தபடி அடிப்பொலி. கேமராமேன் தான் இப்படம் எனும் கோட்டையில் கொடியேற்றுகிறார். சபாஷ் சபாஷ்!
மரகதமணி இசையில் மதன் கார்க்கி வரிகளில் பாடல்கள் பிரமாதம். பின்னணி இசையிலும் எமோஷ்னல் அதிர்வு இருக்குது.

நடிப்பு, பிரம்மாண்டம், இருபெரும் ஸ்டார்ஸ், என படத்தில் எல்லாம் இருந்தும், எதோ குறைவது போல் Feel வருகிறது..

யெஸ்!

இரு ஹீரோக்களுக்கு மட்டும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை பின்பாதி திரைக்கதையிலும் கொடுத்திருக்கலாம். அதேபோல் நமக்குள் எட்டிப்பார்க்கும் லாஜிக் ஓட்டைகளை ஒரு தட்டு தட்டி வைக்க தவறியிருப்பதும் திரைக்கதையின் பிழையன்றி வேறு என்ன?

க்ளைமாக்ஸில் ராமனையும் பீமனையும் கதைக்குள் புகுத்தி வட இந்திய ரசிகர்களை புல்லரிக்க வைக்கும் வித்தை தெரிந்த இயக்குநருக்கு, எந்தக்கதையிலும் ஹீரோ கேரக்டரை டாமினேட் பண்ற அளவிற்கு வில்லன் கேரக்டர் இருந்தால் தான் படமும் வொர்க்கவுட் ஆகும் என்பது தெரியாமலா இருக்கும்?.. போதும்னு விட்டிருப்பார். ஏன்னா மாவீரன்ல பாகுபலிகள்ல எல்லாம் வில்லன்கள் அப்படி மிரட்டியிருப்பாங்க. இதில் பொத்தாம் பொதுவா ஆங்கிலேயர்கள் என அடித்து விட்டிருப்பதால், ஹீரோஸ் கோட்டை தொடும் நேரத்தில், நாம் கேட்டை நோக்கி திரும்பத் தோன்றது..

ஆனாலும் என்ன…

என்.டி.ஆர் ராம்சரணின் ஸ்கிரீன் பெர்சன்ஸ், கண்குளிர் பிரம்மாண்டம், ஆகத்தரம் எனப்படும் உலகத்தரமான மேக்கிங் என நிறைய அம்சங்கள் இருப்பதால் நிச்சயமாக குடும்பத்தோடு ஒருமுறை விசிட் அடிக்கலாம்
-மு.ஜெகன் கவிராஜ்