Tamil Movie Ads News and Videos Portal

Zee5-ல் RRR!

இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர், இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலியின் பெருமைமிகு படைப்பான ‘ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், ஜீ5 தளத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும்  மலையாளம் மொழிகளில் மே 20 அன்று பிரத்யேகமாக டிஜிட்டலில் வெளியாகிறது !

சென்னை மே 13, 2022 – இன்று காலை ஜீ5 தளம் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சர்ய அறிவிப்பை வெளியிட்டது.  இந்த வருடத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான  ‘ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் ஜீ5 தளத்தில் மே 20, 2022 அன்று பிரத்யேகமாக ஒளிபரப்பாகுமென ஜீ5 அறிவித்துள்ளது. படம் வெளியாகி 50 வது நாளை கடந்த நன்நாளில் படத்தின்  டிஜிட்டல் வெளியீடு குறித்த இந்த மகிழ்ச்சியான செய்தியை ஜீ5 தளம் வெளியிட்டுள்ளது.

இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில், ஜூனியர் என் டி ஆர் , ராம்சரண் மற்றும் ஆலியா பட் முக்கிய வேடத்தில் நடிக்க, பிரமாண்டமாக உருவான இந்த திரைப்படம், மார்ச் 25, 2022 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகி,  இந்திய திரைத்துறையில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக மாறியது குறிப்பிடத்தக்கது.

மே 20 நடிகர் ஜூனியர் என்டிஆர் பிறந்தநாள் என்பது,  ஜீ5 தளத்தில் ‘ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படத்தை கொண்டாட, ரசிகர்களுக்கு மேலும் ஒரு முக்கிய சிறப்பம்சமாக அமைந்துள்ளது.  4K தரத்திலும், டால்பி அட்மாஸ் தரத்திலும் வீட்டிலிருந்தபடியே வீட்டுத் திரைகளிலும், மொபைல் போனிலும்  இத்திரைப்படத்தை  ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

இந்த திரைப்பட வெளியீட்டு அறிவிப்பைக் குறிக்கும் வகையில் ஜீ5 தளத்தால் வெளியிடப்பட்ட புதிய மற்றும் பிரத்யேக டிரெய்லரால், தென்னிந்தியத் திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் தென்னிந்திய மொழி பேசாத பார்வையாளர்களும் ஜீ5 தளத்தின் இந்த உலக டிஜிட்டல் பிரிமியரைப் பற்றி மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  ஏனெனில் அவர்கள் படத்தின் ஒரிஜினல் மொழியில் உருவான வசனங்களுடன் படத்தை சப்டைட்டிலுடன் பார்க்கலாம்! “ஆர் ஆர் ஆர்” RRR  திரைப்படம் ஜீ5 தளத்தில் TVOD இல் கிடைக்கிறது.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர் ஆர் ஆர்” RRR  திரைப்படம் , இந்திய திரைத்துறையின் முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்து, பாக்ஸ் ஆபிஸில் ஒரு புதிய அளவுகோலை உருவாக்கியுள்ளது. வர்த்தக அறிக்கைகளின்படி, உலகம் முழுவதும் இப்படம் ரூ. 1000 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.