Tamil Movie Ads News and Videos Portal

ராக்கெட்ரி- விமர்சனம்

உலகத்தின் தலைசிறந்த ராக்கெட் விஞ்ஞானிக்கு தேசத்துரோகி என்ற பட்டத்தை உருவாக்கி, அதற்கான காரணத்தை ஜோடித்து அவரின் வாழ்க்கையை சீரழிக்கும் கதை தான் ராக்கெட்ரி. ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்வில் நடந்த நிஜத்தை புனைவு கலந்து படமாக்கியிருக்கிறார் நடிகரான இயக்குநர் மாதவன். இந்தப்படத்தை இயக்கியதன் மூலம் நல்லபட இயக்குநர்கள் லிஸ்டில் அமர்கிறார் மாதவன்

நம்பி நாராயணன் கதையில் தன்னை நம்பி நம்பிநாராயணனாக மாற்றியிருக்கிறார் மாதவன். அவர் வார்த்த கேரக்டரில் நடிகராக அவரே வாழ்ந்திருப்பது அசத்தல். சிம்ரன் ஒருசில காட்சிகளில் அனுதாபத்தை அள்ளுகிறார். கெஸ்ட் ரோலில் வரும் சூர்யா கதையை நகர்த்த உதவுகிறார். சின்னச் சின்ன கேரக்டர்களும் கவனம் ஈர்க்கிறார்கள். உன்னி கேரக்டர் ஒரு இடத்தில் நின்று பேசுகிறது

படத்தில் ராக்கெட் விஞ்ஞானம் குறித்த தகவல்கள் கொட்டிக்கிடக்கிறது. அவற்றை பாமர ரசிகன் புரியும் வகையில் ஓரளவு எளிமைப்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் எளிமைப் படுத்தியிருக்கலாம்.

சாம்.சி எஸ் பின்னணி இசையில் வழக்கம் போல் கதையின் கணம் உணர்ந்து அசத்தியிருக்கிறார். ஒளிப்பதிவின் தரம் ஒவ்வொரு காட்சியிலும் மின்னுகிறது.

ஒரு பயோபிக் கதையில் பாசிட்டிவ் முடிவு வருவது தான் சமூகத்திற்கு பாசிட்டிவ் வைப்ரேசனைக் கொடுக்கும். அந்த வகையில் நம்பி நாராயணன் அவர்களின் சட்டப்போராட்டம் பாசிட்டிவ் வைப்ரேசனே! பெரும்பாலும் கமர்சியல் விசயங்களை தவிர்த்தே படமாக்கியிருக்கிறார் மாதவன். அதுதான் இந்தப்படத்தை அடுத்த லெவலுக்கும் எடுத்துச் செல்கிறது. பின்பாதியில் அமைந்த எமோஷ்னல் பேக்கேஜ் முன்பாதியிலும் அமைந்திருக்கலாம். என்றாலும் படத்தின் நிறைவில் மனம் ஏகமாக நிறைவதால் ராக்கெட்ரி நோக்கி ஒரு ஹார்ட்டீன் விடலாம்

-மு.ஜெகன் கவிராஜ்

4/5