தல அஜித்திற்கு நெருக்கமானவரின் திறமை பற்றி ஆர்.கே சுரேஷ்
தாயின் அருள் புரொடக்சன் சார்பாக அலெக்ஸ் தயாரித்து இயக்கி நடித்துள்ள படம் எதிர்வினையாற்று. இன்று இப்படத்தின் ஆடியோ வெளியீடு நடைபெற்றது.
விழாவில்
நடிகர் ஆர்.கே சுரேஷ் பேசியதாவது,
“சினிமாவில் சின்னப்பையன் மாதிரி உள்ள வந்து டிஸ்டிப்யூட்டராக வந்து இப்போது நடிகனாக வந்தது சந்தோஷமாக இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் அனிதா மேடத்திற்காகவே நான் நடிக்க ஒத்துக்கிட்டேன். அலெக்ஸ் மேல் எனக்கு யோசனை இருந்தது. டாக்டராக இருந்தவர் எப்படி படத்தைச் சரியாக எடுக்கப்போகிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர் கதை சொல்லிய விதத்திலே இவர் சரியாக எடுத்துவிடுவார் என்று முடிவு செய்துவிட்டேன். இக்கதைக்கு நான் கேமராமேன் தருகிறேன் என்று சொல்லி மனோஜை அறிமுகப்படுத்தினேன்..மனோஜ் திறமையான கேமராமேன். அவர் தல அஜித்திற்கு மிகவும் நெருக்கமானவர். ஹீரோயின் சனம்ஷெட்டி பப்ளி கேர்ள். இந்தப்படத்தில் புதிதாக ஒரு விசயத்தை அலெக்ஸ் கையாண்டிருக்கிறார். நிச்சயம் படம் பெரிதாக பேசப்படும்” என்றார்.