‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்திற்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வாட்ஸ் அப் வீடியோவில் கொலைமிரட்டல் விடுத்தார்.
மேலும் அந்த சமூகத்தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர், இப்படத்தின் படப்பிடிப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி காவல் நிலையத்தில் மனு கொடுத்தார். இப்படி பல வழிகளில் அப்படத்திற்கு எதிராக பலரும் குடைச்சல் கொடுத்தாலும் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தி வருகிறதாம் படக்குழு. இதுவரை 90 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறதாம். இதுவரை எல்லாமே திட்டமிட்டபடி செல்வதால், இனியும் எல்லாமே திட்டமிட்டபடி செல்லும் என்று அறிவித்துள்ளது படக்குழு.