Tamil Movie Ads News and Videos Portal

ரிபப்பரி- விமர்சனம்

காதலிக்கும் ஆண்கள் மரணிக்கும் ஊரில் காதலியைத் தேடிச் செல்லும் நாயகனின் கதை

மாஸ்டர் மகேந்திரன் தான் இதுவரை சந்திக்காத ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். அந்தப் பெண்ணைச் சந்திக்கும் முயற்சியில் இறங்கும் போது, காதலிக்கும் ஆண்கள் இறந்து போகும் ஊரில் தான் தன் காதலி இருக்கிறார் என்பது தெரிய வருகிறது. அதன் பின் மகேந்திரன் எடுக்கும் முயற்சிகள் என்ன? என்பதே படத்தின் கதை

நடிப்பு என்பதை சிறு வயதிலே நன்றாக உணர்ந்து கொண்ட நடிகர் என்பதால் மகேந்திரன் மிக இயல்பாக நடித்து கவர்கிறார். நண்பர்களோடு சேர்ந்து அவர் பங்குபெறும் காட்சிகளும் ஓகே ரகமாகவே இருக்கிறது. நாயகி உள்பட படத்தில் அனைவரும் சிறப்பாகவே நடித்துள்ளனர்.

சிறிய படங்கள் டிமாண்ட் செய்யும் இசையைச் சரியாக வழங்கியுள்ளார் இசை அமைப்பாளர். படத்தில் ஆர்ட் டிப்பார்ட்மெண்ட் & எடிட்டிங் டீம் நன்றாக வேலை செய்துள்ளது. ஒளிப்பதிவாளர் காட்சிகளின் கணம் அமைந்து வொர்க் செய்துள்ளார்

வலுவான கதைகளை விட, புதிதாக உள்ள கதைகள் ரசிகர்களை ஆர்வப்பட வைக்கும். அப்படியான ஒரு கதையை எடுத்து கவனிக்க வைத்துள்ளார் இயக்குநர். சில பல வழக்கமான காட்சிகளை தவிர்த்திருக்கலாம். திரைக்கதையை ஓரளவு சுவாரஸ்யம் குறையாமல் நகர்த்திச் சென்ற வகையிலும் ரிபப்பரி ஈர்க்கவே செய்கிறது. இன்னும் சற்று கூடுதல் முயற்சி எடுத்திருந்தால் மகேந்திரனுக்கு இந்தப்படம் ஒரு நல்ல வாசலைத் திறந்திருக்கும். இப்போது ஜன்னலைத் திறந்த வகையில் ஆறுதல் தான்

2.75/5
-மு.ஜெகன் கவிராஜ்

#Ripupbury #ரிபப்பரி