Tamil Movie Ads News and Videos Portal

மிஷன் சாப்டர்-1- விமர்சனம்

மகளை காப்பாற்ற லண்டன் வரும் தந்தைக்கு ஏற்படும் ஆக்சன் அனுபவமே மிஷன் சாப்டர்-1

தானொண்டு தன் மகளுண்டு என வாழும் அருண் விஜய் தன் மகளைக் காப்பாற்ற லண்டன் வருகிறார். மகள் மருத்துவச் செலவிற்கு முப்பது லட்சம் தேவை. அதைத் திரட்டும் வழியில் செல்லும் போது சில திருட்டு வழிப்பறிகள் அவர் செல்லும் பாதையை மறிக்கிறார்கள். அப்போது ஏற்படும் மோதலால் அருண்விஜய் சிறை செல்கிறார். அந்தச் சிறைக்குள் ஆகப்பெரும் வில்லன் டீம் ஒன்றும் அவர்களின் சதித்திட்டமும் ஹீரோவிற்கு தெரிய வருகிறது. அடுத்தடுத்து ஆக்சன் அவதாரம் எடுக்கிறார் ஹீரோ. அவர் ஆக்சன்களுக்கான ரியாக்சன் என்னென்ன என்பதாக படத்தின் திரைக்கதை விரிகிறது.

தான் வரும் காட்சிகளில் நொடிக்கு நொடி ‘அடித்து’ ஆடியுள்ளார் அருண்விஜய். தமிழ்சினிமாவில் தரமான ஆக்சன் ஹீரோ வரிசையில் அருண்விஜய்க்கு தாராளமாக கொடுக்கலாம் முதலிடம். தன் உருண்டைக் கண்களால் எல்லா எமோஷ்ன்களையும் கடத்தி விடுகிறார் நிமிஷா சஜயன். எமி ஜாக்சன் தான் ஏற்ற வேடத்திற்கு ஏற்றாப்போல் வேலை செய்துள்ளார். அவரின் ஆக்சன் ப்ளாக் செம்ம. வில்லனும் அவரது டீமும் க்ளீன் ஸ்கெட்ச் மெட்டிரியல்ஸ்.

ஜி.வியின் பின்னணி இசை இந்த மிஷினுக்கு ஆயுள் நாள் ஆயில். படத்தின் சீரான ஓட்டத்திற்கு தோதாக இசையைக் கொடுத்துள்ளார் ஜிவி. கேமராமேன் கிடைத்த சின்ன இடத்திலும் பெரிய தடம்பதித்து உழைத்துள்ளார்.

மகளுக்காக ஹவாலா பணம் சம்பந்தமாக செல்லும் அருண்விஜய்க்கு ஏற்படும் சிக்கல்களை ஒவ்வொரு சீனாக கோர்த்த விதம் சிறப்பாக அமைந்துள்ளது. மகளுக்காக வேண்டி எதையும் செய்யும் ஹீரோ கேரக்டரை ஒரு இடத்தில் பொது நன்மைக்காக திசை திருப்பும் திரைக்கதை யுக்தி படத்தில் பக்காவாக செட்டாகியுள்ளது. இடைவேளைக்கு முன்னதாக ஒரு ஆக்சன் சீக்வென்ஸ் ஹாலிவுட் தரத்தில் அமைந்துள்ளது. குறைவான மைனஸ்களை கடந்து நிறைவான ப்ளஸ்களோடு வந்துள்ளது படம். ஆக்சன் விரும்பிகளுக்கு மிஷன் சாப்டர்-1 தருவது டபள் விருந்து
3.25/5
-மு.ஜெகன் கவிராஜ்