Tamil Movie Ads News and Videos Portal

ஆறு படங்களில் இறங்கி அடிக்கும் நடிகரான இன்னொரு இயக்குனர்!

காலம் காலமாக இயக்குனர்கள் நடிகர்களாக மாறுவது தமிழ்சினிமாவில் புதுமையில்லை! தொற்று தொட்டு நடைபெறும் நடைமுறைதான்.

அந்த வகையில் “கல்லூரி காலங்கள்” என்ற படத்தை இயக்கிய ரெமோ ஷிவா தற்போது நடிகராக மாறியிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான மாஸ்டர் தினேஷ், யோகிபாபு நடிப்பில் வெளியான “லோக்கல் சரக்கு” படத்தில் மெயின் வில்லனாக அறிமுகமாகி மிரட்டியிருக்கிறார் ரெமோ ஷிவா இந்த திரைப்படத்தை எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியிருந்தார். இதில் வில்லன் கதாபாத்திரம் தனியாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது

ரெமோ ஷிவா இதற்கு முன் விமல் நடிப்பில் உருவான “தெய்வமச்சான்” படத்தில் விமலுக்கு அண்ணனாக குணச்சித்திர நடிப்பில் அசத்தியிருந்தார். இந்த திரைப்படத்தை மார்டின் நிர்மல்குமார் இயக்கியிருந்தார்.

ரெமோ ஷிவா தற்போது ரேணிகுண்டா, கருப்பன் திரைப்பட இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகிவரும் திரைப்படத்தில் மிக முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது மிகவும் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரம். இது தவிர முக்கிய இயக்குனர்களின் ஆறு படங்களில் தமிழ்சினிமாவே திரும்பி பார்க்கும் முக்கியமான பல்வேறு கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார்.

பல முன்னணி இயக்குனர்கள் நடிகர்களின் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.