இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தானே இயக்கி, தயாரித்து, நடித்த திரைப்படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7.0’. இப்படத்தின் சிறப்பே படத்தில் வேறு எந்தக் கதாபாத்திரமும் கிடையாது, பார்த்திபன் மட்டும் தான் என்பதே. இருப்பினும் படத்தை மிக சுவாரஸ்யமாக இயக்கி நடித்ததோடு, உணர்வுகளை பார்வையாளர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் மிக எளிமையாக கடத்தி இருந்தார்.
இது அப்படத்தின் வெற்றிக்குப் பெரிய பலமாக அமைந்தது. மேலும் படம் பல திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு பல விருதுகளையும் வென்று வருகிறது. இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படலாம் என்ற பேச்சு தற்போது அடிபடுகிறது. ஹிந்தியில் மிகச் சிறந்த நடிகராக அறியப்படும் ‘நவாசுதீன் சித்திக்’ பார்த்திபன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும், படத்தை பார்த்திபனே இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் விதமாக இயக்குநர் பார்த்திபன் நவாசுதீன் சித்திக்கோடு எடுத்த புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு, அதில் OS : 7.0 ரீமேக் தொடர்பான பேச்சு வார்த்தையின் போது என்று” பதிவிட்டுள்ளார். இதனால் கண்டிப்பாக ஒத்த செருப்பு ஹிந்தியிலும் ஒரு வலம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.