Tamil Movie Ads News and Videos Portal

மனம் தளராத ரெஜினா கசாண்ட்ரா

தெலுங்குத் திரையுலகில் தன் கவர்ச்சியினால் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா” படத்தில் குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்தவர், பின்னர் சில இடைவெளிக்குப் பின்னர் நடித்த ‘மிஸ்டர். சந்திரமெளலி படத்தில் கவர்ச்சியில் இறங்கி அடித்து ரசிகர்களைக் கிறங்கடித்தார். இருப்பினும் அப்படமும் அவருக்கு அதிக வாய்ப்புகளைப்

பெற்றுத் தரவில்லை. பின்னர் த்ரிஷா, நயன் பாணியில் கதைநாயகியாக இவர் நடித்த “செவன்” திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பதிவு செய்யவில்லை. இந்நிலையில் மீண்டும் இவர் கதைநாயகியாக ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளில் தயாராகவிருக்கும் இப்படத்தினை ‘திருடன் போலீஷ்’ மற்றும் ‘உள்குத்து’ ஆகியப் படங்களை இயக்கிய கார்த்திக் ராஜூ இயக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 10ல் தொடங்கவிருக்கிறது. மனம் தளராமல் தனது முயற்சியில் தொடர்ந்து பயணிக்கிறார் ரெஜினா கசாண்ட்ரா.