”குயின்” இன்று ஜெயலலிதாவை திரையில் காணத் தயாரா..??
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. ஏ.எல்.விஜய் கங்கனா ரணாவத்தை ஜெயலலிதாவாக மாற்றி தலைவி படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். அது போல் பிரியதர்ஷிணி இயக்கத்தில் நித்யா மேனன் நடிப்பில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தி அயர்ன் லேடி” என்ற பெயரிலும் உருவாகவிருக்கிறது. அது போல் கெளதம் மேனன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்திருக்கும் ஒரு வெஃப் சீரிஸ் ஒன்று படப்பிடிப்பெல்லாம் முடிந்து ரீலீஷுக்கு தயாராகவுள்ளது. “குயின்” என்று பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. ரம்யா கிருஷ்ணனின் தோற்றம் குறித்து நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்திருக்கும் நிலையில் இன்று மாலை இந்த வெஃப் சீரிஸின் முன்னோட்டம் வெளியாகவிருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வரை திரையில் காணத் தயாராகுங்கள்