Tamil Movie Ads News and Videos Portal

ராயர் பரம்பரை- விமர்சனம்

 

இந்த விமர்சனத்தை எழுதியவர் உங்கள் டிராயர் பரம்பரையான்😃

ஊரே தமன்னாவோட “காவாலா” பீவர்ல இருக்கும் போது நேத்து காதோரம் வசனங்களை நிரப்பி சிரிக்க வைக்க முயற்சித்தது ராயர் பரம்பரை படம். சுமார் 17 முறைக்கும் மேல் ராயர் என்பதை டிராயர் என மாற்றியழைத்து ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார் மொட்டை ராஜேந்திரன். ஆனந்த் ராஜ் பேசிச்செய்யும் காமெடிகளை விட பேசாமல் செய்யும் காமெடி ரசிக்க வைக்கிறது. ஹீரோயின் சரண்யா ஓகே ரகம். கிருஷ்ணா இளமையோடு இருக்கிறார். துடிப்பாக சண்டை செய்கிறார்..கதைதேர்விலும் மிகை நடிப்பிலும் மட்டும் அவர் கவனம் செலுத்த வேண்டும்..

பின்னணி இசை பாடல்கள் இரண்டும் ஓரளவு படத்தை காப்பாற்றியுள்ளது. குறிப்பாக விநாயகர் பாட்டு சிறப்பு. ஒளிப்பதிவில் பட்ஜெட் தெரிந்தாலும் ஒளிப்பதிவாளர் சமாளித்துள்ளார்.

படத்தின் கதை?

காதல் என்றாலே கசக்கும் ராயரான ஆனந்த் ராஜ், அவரின் மகளை காதலிக்கும் கிருஷ்ணா அடுத்து என்ன என்பதே படத்தின் கதை. மிக மிக பரிச்சயப்பட்ட கதை தான். திரைக்கதை ஆக்கத்தில் இன்னும் சீராக முயற்சித்து உழைத்திருந்தால் ராயர் பரம்பரை சிரிக்க வைத்திருக்கும்
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்