தென்னிந்திய மொழிப்படங்களில் எந்தவொரு மொழிப்படத்தில் அறிமுகமாகும் நடிகரோ நடிகையோ அவர்களுக்கு தமிழ் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். ஏனென்றால் இங்கு சம்பளமும் அதிகம். அதே நேரம் தேசியளவில் கவனம் ஈர்க்கவும் முடியும் என்பதே இதற்குக் காரணம். இதில் ராஷ்மிகா மந்தனா, மாளவிகா மோகனனும் இருவருமே விதிவிலக்கல்ல.
எப்படியாவது முன்னணி இடத்தைப் பிடிக்க இருவரும் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகா, சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து வருகிறார். ‘பேட்ட’ படத்தில் ஹீரோயினாக நடிக்காமல் துணை கதாபாத்திரத்தில் நடித்தே தற்போது விஜய்க்கு ஹீரோயினாக உயர்ந்திருக்கிறார் மாளவிகா. இந்த வாய்ப்பு ராஷ்மிகாவிற்கு செல்ல வேண்டியது என்றும் ஒரு பேச்சு நிலவுகிறது. இந்நிலையில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ஹீரோயினா ஒப்பந்தம் ஆவதில் இருவருக்குமே இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் தற்போதைய நிலவரத்தின் படி ராஷ்மிகா முந்துகிறார்.