ஆரம்பத்தில் ‘அட்டக்கத்தி’ ‘மெட்ராஸ்’ போன்ற படங்களின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் வலியையும் அவர்களின் அரசியலையும் அசத்தலாக பேசிய ரஞ்சித், தனது அடுத்த இரு படங்களில் தொடர்ச்சியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிக்க வைத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அதிகம் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார். மேலும் திரைக்கு வெளியில் அவர் சமூகம் சார்ந்து ஆற்றி வரும், முன்னெடுக்கும் பல நிகழ்வுகள் மூலம் அதிர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார்.
அவர் தற்போது வடசென்னை குத்துச் சண்டை வீரர்களின் வாழ்க்கையை “சல்பேட்டா” என்ற பெயரில் படமாக்கி வருகிறார். இதில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்க நாயகியாக ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தில் நடித்த துஷாரா நடிக்கிறார். மேலும் சத்யராஜ், கலையரசன், தினேஷ் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் மூலம் என்ன மாதிரியான அரசியலை ரஞ்சித் பேச இருக்கிறார். என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது திரையுலகம்.