ரங்கோலியின் வண்ணங்கள் ரசிகனை ஈர்க்கிறதா?
வட சென்னையின் ஒரு பகுதியை வண்ணாரப்பேட்டை என்று சொல்வார்கள். துணிகள் வெளுக்கும் இனத்தவர்கள் வாழும் இடமாக அது அக்காலத்தில் திகழ்ந்தது. அப்படியான துணி வெளுப்பவர்களின் வாழ்க்கையைக் கொண்டதும் தான் வடசென்னை! பாக்ஸிங் கலாச்சாரமும் கூலிப்படை கலாச்சாரம் கொண்டதாகவுமே காட்டப்பட்டு வரும் வடசென்னையின் இன்னொரு முக்கியமான முகத்தை அறிமுகப்படுத்திய இயக்குநருக்கு பாராட்டுக்கள்
இந்தப் பின்புலத்தில் துவங்கும் கதை அப்படியே பயணிக்கவில்லை என்பது சோகம். முருகதாஸ் மகன் அரசுப்பள்ளி மாணவன். தன் மகனை தனியார் ஸ்கூலில் சேர்த்து படிக்க வைக்க விரும்புகிறார் முருகதாஸ். மகன் ஹமரேஸுக்கு அது விருப்பமே இல்லை. இருந்தும் கடனை வாங்கி படிக்க வைக்கிறார். தனியார் பள்ளிக்குப் படிக்கச் செல்லும் ஹமரேஸ் பிரார்த்தனா மீது காதல் கொள்கிறார். படிப்புக்கும் காதலுக்குமான பயணத்தில் ஹமரேஸ் வாழ்வு என்னவாகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை
முதல்படம் என்ற சுவடே தெரியாமல் நடித்து ஆச்சர்யப்படுத்துகிறார் ஹீரோ ஹமரேஸ். பிரார்த்தனா சிறுபெண்போல தெரிகிறார். நடிப்பில் பெரிய பெண் போல அசத்துகிறார். முருகதாஸ் உள்பட அனைவரின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது
இந்தப்படம் வேண்டி நிற்கும் இசையைச் சரியாக வழங்கியுள்ளார் இசை அமைப்பாளர். ஒளிப்பதிவும் படத்திற்கு பெருந்துணை செய்துள்ளது
மிகச்சிறந்த துவக்கத்தைக் கொண்ட படம் அப்படியே தொடரவில்லை.