கவர்ச்சிக்கு மாறிய ரம்யா பாண்டியன்
’ரம்யா பாண்டியன்’ என்று சொன்னால் பலருக்கும் ஆரம்பத்தில் அந்த நடிகையைத் தெரியாது. ‘ஜோக்கர்’ ‘ஆண் தேவதை’ படத்தின் ஹீரோயின் என்று சொன்னால் தான் பாதி பேருக்குத் தெரியும். இந்த நிலையை ரம்யா பாண்டியன் சில மாதங்களுக்கு முன்னர் நடத்திய போட்டோ ஷூட் மாற்றியது. பச்சை நிற சேலையில் அவரின் அழகு பளிச்சிட அவர் எடுத்த போட்டோ ஷூட் இளைஞர்களிடம் வைரல் ஆகியது. ரம்யா பாண்டியனும் நன்கு பரிச்சியமான முகமானார். ஆனாலும் ஏனோ பட வாய்ப்புகள் வரவில்லை. இது போதாது என்று அவர் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை சில ஜந்துக்கள் மார்பிங் செய்து அதை ஆபாசப் படமாக மாற்றி வெளியிட, பயந்து போன ரம்யா அப்புகைப்படத்தில் இருப்பது தானில்லை என்று தன்னிலை விளக்கம் கொடுத்ததோடு, போலீசிலும் புகார் செய்யப் போவதாக கூறினார். தற்போது என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அவரே ஒரு கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி தன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களாவது அவருக்கு வாய்ப்புகளைப் பெற்றுத் தருமா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.