‘பீட்ஸா’ படத்தின் மூலம் தமிழ்ப்படங்களில் தலைக்காட்டத் துவங்கியவர் ரம்யா நம்பீஷன். நடிகையாக பயணிக்கும் போதே ஒரு பாடகியாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, தமிழ் மற்றும் மலையாளத்தில் சில பாடல்களையும் பாடியிருக்கிறார் ரம்யா. மேலும் சென்ற ஆண்டு நடிகை பாவனாவிற்கு ஏற்பட்ட பாலியல் அத்துமீறலைக் கண்டித்து உருவாக்கப்பட்ட பெண்கள் அமைப்பிலும் தன்னை இணைத்துக் கொண்டு பெண் உரிமைக்காக தைரியமாக குரல் கொடுத்து வருகிறார் ரம்யா நம்பீஷன்.
தற்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக “தமிழரசன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பா.ஜ.க கட்சியை சேர்ந்த வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணண் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த விழாவில் தன்னை மேடைக்கு கடைசியாக அழைத்தது மற்றும் கடைசி வரிசையில் அமர வைத்தது போன்ற நிகழ்வுகளால், படக்குழு தன்னை அவமதிப்பதாக கருதி அவர் பாதியிலேயே விழாவிலிருந்து கிளம்பிவிட்டார்.