அக்ஷயகுமார் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியான ராம்சேது படம் எதிர்பார்ப்பை என்ன செய்தது..எப்படி செய்தது?
இந்தியா இலங்கைக்கு இடையில் உள்ள பாலம் ராமரால் கட்டப்பட்டதா) இல்லையா? என்ற ஆராய்ச்சிக்காக ஹீரோ கிளம்புகிறார் அவருக்குப் பின்னால் என்னவெல்லாம் கிளம்புகிறது என்பதும், அவர் எப்படியெல்லாம் குழம்பினார் என்பதும் தான் ராம்சேது படத்தின் கதை
ஒரு படத்தில் தோன்றும் கதாப்பாத்திரங்களுக்கான ரைட்டிங்கில் டெப்த் இல்லை என்றால் அக்கதாப்பாத்திரங்கள் எவ்வளவு தான் நன்றாக நடித்தாலும், அவர்களின் நடிப்பு மிகையாகவே தெரியும். இப்படத்தில் அக்ஷயகுமார் நாசர் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பு நமக்கு மிகையாகவே தெரிகிறது. தற்கால அரசியல் சூழலில் அதிகம் விவாதிக்கப்பட்டு வரும் ராமர்பாலம் என்ற விசயத்தைப் பற்றிய கதை என்பதால் பல டேரிங்கான அரசியல் பேசப்பட்டிருக்கும் என்று பார்த்தால் படத்தில் அதுவும் மிஸ்ஸிங். சற்று பேண்டஸி அடிப்படையிலான கதை என்பதால் குழந்தைகளை கவரும் வண்ணம் சி.ஜி உள்ளிட்ட டெக்னிக்கல் ஏரியா நல்லாருக்கும் என்று பார்த்தால் அதுவும் மிஸ்ஸிங்
இசை ஒளிப்பதிவு இரண்டுமே ஓகே என்ற ரகம் தான்.
எதையும் கதையாக்கிட முடியும். ஆனால் எல்லாவற்றையும் சிறந்த திரைக்கதையாக்கிட முடியாது என்பதற்கான உதாரணத்தோடு இப்படத்தின் ஸ்கிரீன்ப்ளே அமைந்துள்ளது நமது துரதிர்ஷ்டம்
ராம்சேது- தவறிய இலக்கு
2/5
-மு.ஜெகன் கவிராஜ்
#RamSetu #ராம்சேது