Tamil Movie Ads News and Videos Portal

“ரஜினியை எதிர்பார்த்தேன் கமல் செய்துவிட்டார்”- எஸ்.ஏ.சி ஆதங்கம்

நேற்றைய கமல் 60 விழாவில் இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் பேசியதாவது,

“ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று பெரிதும் எதிர்பார்த்தேன். ஆனால், கமல்ஹாசன் துணிச்சலாக அரசியலுக்கு வந்துவிட்டார்.

ரஜினிகாந்தும் விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

இந்த இரு ஜாம்பவான்களும் இணைந்து அரசியல் செய்தால் சாதிப்பது நிச்சயம்.

என் ஆசை என்னவென்றால் கமல், ரஜினி ஆகிய இருவரும் சேர்ந்தால் தமிழகத்துக்கும், தமிழருக்கும் நல்லது. இருவருமே கலை உலகின் மூத்த பிள்ளைகள். இருவரும் இணைந்தால் கலை உலகமே பின்னால் நிற்கும். எனவே அரசியலில் இருவரும் ஒன்று சேர வேண்டும்.

இங்கே.. தமிழன் அது இதுவென பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு தண்ணீர் குடித்தாலே அவன் தமிழன்தான். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது நியதி.

எனவே இதுவரையிலும் ஆண்டவர்கள் இனி ஆளப் போகிறவர்களுக்கு வழி விடட்டும்.

இனி ஆளப் போகிறவர்கள் ஆண்ட பின்னர் இது போதுமென நினைத்து தம்பிமார்களுக்கு நீங்களும் வழிவிட்டுச் செல்லுங்கள்”
என்றார்.