நடிகர் ரஜினி தான் இந்தியாவின் சூப்பர்ஸ்டார் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. ஆனால் அவரது மாஸ் பிம்பம சமீபகாலமாக உடைபட்டு வருவதாக தெரிகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில். சூப்பர்ஸ்டார் படம் வெளியானால் அவர் படத்தைத் தாண்டி வசூல் அள்ளுவது என்பது பெரிய கஷ்டம். ஆனால் அதை அஜித் நடித்த விஸ்வாசம் படம் உடைத்தது. பேட்ட விஸ்வாசம் இருபடங்களும் ஒரே நாளில் வெளியானது. ஆனால் ரஜினியின் பேட்ட படத்தை பின்னுக்குத் தள்ளி வசூல் வேட்டையாடியது விஸ்வாசம். தற்போது சென்ற வாரம் சன்டிவியில் ரஜினி நடித்த பேட்ட விஜய் நடித்த ஜில்லா ஆகிய படங்கள் ஒளிப்பரப்பாயின. இதில் டி ஆர் பி ரேட்டிங்கில் பேட்டயை பின்னுக்குத் தள்ளியுள்ளது விஜய்யின் ஜில்லா