‘தர்பார்’ படத்தினைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் படத்திற்கு ‘அண்ணாத்தே’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது, இப்படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது. படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா குஷ்பு என முன்னாள் மற்றும் இன்னாள் கதாநாயகிகள் இணைந்து நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அஜீத் வேண்டாம் என்று ஒதுக்கிய கதையைத் தான் ரஜினி ஓகே செய்து நடித்து வருகிறார் என்கின்ற செய்தி தற்போது பரவி வருகிறது. விவேகம் படத்தின் கதையினை சொல்லும் போதே ‘அண்ணாத்த’ கதையை சொன்னதாகவும் அதை அஜீத் நிராகரித்து ‘விவேகம்’ மற்றும் ‘விசுவாசம்’ ஆகிய கதைகளை தேர்ந்தெடுத்ததாகவும், ‘அண்ணாத்தே கதையில் உள்ள குடும்ப செண்டிமெண்ட் பார்த்து ரஜினிகாந்த் அதனை ஓகே செய்துவிட்டதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது