சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திராவிடத் தலைவர் ஈ.வெ.ரா.பெரியாரைக் குறித்துப் பேசிய பேச்சி பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கும் நிலையில், ரஜினிகாந்தின் அதிதீவிர ரசிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் ரஜினிக்கு பெரியார் மீது மிகுந்த மரியாதை உண்டு என்று கூறி இருக்கிறார். இது குறித்து பேசிய விவரம் என்னவென்றால், “ ரஜினி அண்ணன் யார் மனதும் புண்படாமல் பேசக்கூடியவர், தன்னை திட்டுபவர்களைக் கூட திருப்பித் திட்டாத பண்பாளர் அவர்.
எதையும் திட்டமிட்டோ உள்நோக்கத்தோடோ பேசுபவர் அல்ல. அவருக்கு தமிழக பெருந்தலைவர் பெரியார் மீது மிகுந்த மரியாதை உண்டு. அதனால் தான் பெரியாரின் அதிதீவிர விசுவாசியான வேலு பிரபாகரன் அவர்கள் எடுத்த ஈ.வெ.ரா தொடர்பான படம் வெளிவராமல் முடங்கும் சூழல் உருவான போது, அந்தப் படம் கண்டிப்பாக வெளிவர வேண்டும் என்று கூறி பெரும் தொகையை வழங்கி படம் வெளிவர உதவினார். எனவே ரஜினி அண்ணனை யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்..” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.