‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஹெச்.வினோத், அஜீத்குமார் கூட்டணி போனிகபூர் தயாரிப்பில் மீண்டும் இணைந்து இருக்கிறது. ‘வலிமை’ என்று பெயர் சூட்டப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் அஜீத்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மேலும் படத்தின் ஒரு போர்ஸனில் அவர் பைக் ரேஸராகவும் வலம் வருகிறார். இது தொடர்பான காட்சிகளை படம்பிடிக்க தற்போது படக்குழுவினர் சுவிட்சர்லாந்து சென்றிருக்கின்றனர்.
மேலும் இப்படத்தில் அஜீத்துக்கு நாயகியாக நடிக்கப் போவது யார் என்கின்ற கேள்வி இருந்து வந்தது. தற்போது அதற்கு விடை கிடைத்திருக்கிறது. ‘காலா’ படத்தில் ரஜினியின் காதலியாக நடித்த ஹீமா குரேஷி இப்படத்தில் அஜீத்குமார் ஜோடியாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஜே.என்.யு பல்கலைகழகத்தில் மாணவர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைக்கு எதிராக குரல் எழுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.