நடிகர் சங்க உறுப்பினர்களில் பெரும்பாலான உறுப்பினர்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறார்கள். இதை உணர்ந்து நடிகர் ரஜினிகாந்த் உதவ முன் வந்திருக்கிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு ரஜினிகாந்த் சார்பாக அரிசி, மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
சென்னை சாலிகிராமத்திலுள்ள செந்தில் ஸ்டுடியோவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தனி அதிகாரி திருமதி.கீதா, பொது மேலாளர் பால முருகன் ஆகியோர் முன்னிலையில் 600- க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு இன்று பொருட்கள் வழங்கப்பட்டது.