ஓரம்போ, வாத்தியார், 6.2 ஆகிய படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தற்போது ” பாம்பாட்டம் ” படத்தை தயாரித்து வருகிறார் மேலும் ” ரஜினி ” என்ற புதிய படத்தையும் தயாரிக்கிறார். இந்த தயாரிப்பாளரின் தயாரிப்பில் பதின்மூன்று வருடங்களுக்கு முன்பு அர்ஜுன் நடித்த வாத்தியார் படத்தை A.வெங்கடேஷ் இயக்கி அது மாபெரும் வெற்றி பெற்றது.
அதே வெற்றிக் கூட்டணி இந்த “ரஜினி “படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.
“மஹாராஜா” படத்தில் நடித்த விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மும்பையை சார்ந்த “கைநாட் அரோரா” தமிழில் அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.