Tamil Movie Ads News and Videos Portal

ரஜினி, கமல் இருவரையும் இணைந்து இயக்குகிறாரா..? லோகேஷ் கனகராஜ்

‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜிக்கு அன்று முதல் ஏறுமுகம் தான். பின்னர் கார்த்தி நடிப்பில் அவர் இயக்கிய ‘கைதி’ படமும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, தளபதி விஜயை வைத்து “மாஸ்டர்” படத்தினை இயக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது. இதனையடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி கமல் இருவரையும் இயக்கும் வாய்ப்பு இவருக்கு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

‘நினைத்தாலே இனிக்கும்’ ‘அவள் அப்படித்தான்’ ‘ஆபூர்வ ராகங்கள்’ போன்ற படங்களில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும் பின்னர் இருவரும் தனித்தனியே நடிக்கத் தொடங்கினார்கள். இப்பொழுது மீண்டும் அவர்கள் ஒரு படத்தில் இணைந்து நடிக்கப் போவதாக அறிவித்திருந்தனர். அப்படத்தை ’அண்ணாத்த’ படத்தின் ரீலீஷுக்குப் பின்னர் தொடங்கலாம் என்று சினிமா ஆர்வலர்கள் கூறுகின்றனர்.