நடிகர் கிஷோர், தென்னிந்திய சினிமாவில் சிறந்த குணசித்திர நடிகர் என கொண்டாடப்படுபவர். ஹீரோ, வில்லன் குணசித்திரம் என எந்தவொரு கதாப்பாத்திரமானாலும் தன் தனிப்பட்ட திறமையால், அற்புத நடிப்பை வழங்கி அசத்துபவர். தற்போது நடிகர் கிஷோர் அறிமுக இயக்குநர் திரவ் இயக்கும் “ராஜாவுக்கு ராஜாடா” படத்தில் அற்புதமான அப்பா கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
“ராஜாவுக்கு ராஜாடா” திரைப்படம் அப்பா மகள் உறவை அழகாக சொல்லும் ஒரு இசைத்திரைப்படமாக உருவாகவுள்ளது. மகளின் பிறந்த நாள் கொண்டாட்ட ஆசை, குடும்ப உறவுகளில் பெரும் அலையை கிளப்புகிறது, இதனை மையமாக கொண்டே படத்தின் கதை நகரும் என்கிறார் இயக்குநர் திரவ். இயக்குநர் திரவ் இதற்கு முன்னால் தேசிய விருதை வென்ற “குற்றம் கடிதல்” படத்தில் இணை இயக்குநராகவும், பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் ஜோதிகா நடிப்பில் உருவான “மகளிர் மட்டும்” படத்தில் திரைக்கதையில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.