பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் இயக்குநராக மாறி இருக்கும் இயக்குநர் இராஜமவுலியின் அடுத்த படம் “ஆர்.ஆர்.ஆர்”. ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டிஆர். அஜய் தேவ்கன், அலியா பட், சமுத்திரக்கனி, மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது. ‘ஆர்.ஆர்.ஆர்’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்திற்கு தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஒவ்வொரு மொழியிலும் ஆர்.ஆர்.ஆர் அர்த்தம் வருவது போன்று வேறு வேறு தலைப்புகள் டேக் லைன்னாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழில் ரத்தம், ரணம், ரெளத்திரம் என்று மூன்று வார்த்தையினை டேக் லைனாக பயன்படுத்தி இருக்கின்றனர். போஸ்டரில் உடலில் நெருப்பு பற்றி எரிவது போன்ற தோற்றத்துடன் ராம் சரணும்,, நீர் பந்து போன்ற உடல் தோற்றத்துடன் ஜூனியர் என்.டி.ஆரின் உருவரும் எதிர் எதிர் திசையில் நின்று கொண்டிருப்பது போன்று போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்றுள்ளது.