பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் கவனம் ஈர்த்த இயக்குநராக மாறி இருக்கும் இராஜமவுலி, தற்போது ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா, அஜய் தேவ்கன், அலியாபட் நடிப்பில் “ஆர்.ஆர்.ஆர்” என்று தற்காலிகப் பெயர் சூட்டப்பட்ட படத்தை இயக்கி வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிய படப்பிடிப்பு பலவித காரணத்தினால் காலதாமதமாகி வருகிறது.
படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் இப்பொழுதே இப்படத்தின் வியாபாரம் 200 கோடி வரை முடிவடைந்திருப்பதாக தெரிகிறது. அதுவும் வெறும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் மட்டுமே 200 கோடி வியாபாரம் ஆகி இருக்கிறதாம். அதிகபட்சமாக நிஜாம் பகுதியில் இப்படத்தின் உரிமையை 75 கோடி ரூபாய்க்கு தில் ராஜு கைப்பற்றி இருக்கிறார். மேலும் இப்படத்தின் வியாபாரம் தமிழகம், கேரளா, கர்நாடகா, வடமாநிலம் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் முடிவடையும் போது, கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.