பிக்ஃபாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். இவர் மற்றொரு பிக்ஃபாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவரான ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நடித்த திரைப்படம் “ப்யார் ப்ரேமா காதல்”. இப்படம் வெற்றி பெற்றது. தற்போது ரைசா எஃப்.ஐ.ஆர் மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் அவர், “தமிழ்நாட்டு மக்களின் மகிழ்ச்சிக்காக ஹரிஷ் கல்யாண் உடன் டேட்டிங் செல்லலாம் என்று இருக்கிறேன். ஆனால் இது வரை யாருடனும் இது போல் சென்றதில்லை என்பதால், எப்படி டேட்டிங் செய்வது, எப்படி ஒருவரிடம் கேட்பது என்று தெரியவில்லை.” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்கு பதிலளித்து வரும் ரசிகர்கள், நீங்கள் டேட்டிங் செல்வது தமிழ்நாட்டு மக்களுக்கு எப்படி மகிழ்ச்சி அளிக்கும். கொஞ்சமாவது பொறுப்போடு பதிவிடுங்கள் என்று அவரது பதிவிற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.