’இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்ற ஆண்டே தொடங்கியது. ஆனால் நிதிச் சிக்கல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்கள் தடைபட்டது. ஒரு வாரம் முன்பு மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பின் போது, படத்தை தயாரிக்கும் 24ஏ.எம் ஸ்டூடியோஸ், ‘புத்துணர்ச்சியுடன் கிளம்பி இருக்கிறோம்.
விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் டீஸர் வெளியாகும்” என்று அறிவித்திருந்தது. அவர்கள் அறிவித்ததைப் போலவே நேற்று படத்தின் டைட்டிலை வெளியிட்டிருக்கின்றனர். இப்படத்திற்கு “அயலான்” என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதனை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். படத்தயாரிப்பில் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனமும் கைகோர்த்திருக்கிறது. ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படமும் சயின்ஸ் பிக்ஷன் வகைமையில் உருவாகி வருகிறது.