‘பல பண்டிகைகள், ஒரே காதல்’ என்று தலைப்பிட்ட புதிய போஸ்டருடன் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை கூறும் ராதே ஷியாம் குழுவினர் மற்றும் பிரபாஸ்.அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள திரைப்படமான ராதே ஷியாமின் போஸ்டர்கள் படம் குறித்த பரபரப்பை ஏற்கனவே உருவாக்கியுள்ளன. பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும் இப்படத்தின் முதல் பார்வை முதல் சமீபத்திய போஸ்டர் வரை அனைத்துமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன. இந்நிலையில், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்கும் விதமாக ‘பல பண்டிகைகள், ஒரே காதல்’ என்று தலைப்பிட்ட புதிய போஸ்டரை ராதே ஷியாம் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதில், பிரவுன் உடையில் அந்தகால கதாநாயகர்களை நினைவுபடுத்தும் வகையில் காணப்படும் பிரபாஸ், படம் குறித்த எதிர்பார்ப்புகளுக்கு இன்னும் வலு சேர்த்துள்ளார். தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்கும் இந்த போஸ்டர், சித்திரைத் திருநாளை கொண்டாடும் விதத்தில் அமைந்துள்ளது.