Tamil Movie Ads News and Videos Portal

ராயன்- விமர்சனம்

துரோகமும் பாசமும் மிங்கிள் ஆகி ஓவர் டோஸ் ஆனா என்னாகும்? அதான் ராயன்

திருநெல்வேலி மாவட்டம் (ஏலன்னு டயலாக் இருக்கு அதான்) ஒரு கிராமத்தில் பெத்த பிள்ளங்களை விட்டுட்டு தாய் தகப்பன் எங்கிட்டோ போய்டுறாங்க. அந்தப் பெத்த மொத்தப் பிள்ளைங்கள்ல துஷாரா விஜயன் ஒத்தப் பொட்டப்புள்ள. மிச்சம் மூனுபேரும் ஆம்பளைங்க. அதுல மூத்தவரும் எல்லா துன்பங்களையும் பாத்தவரும் தான் தனுஷ். தம்பிங்களுக்கு ஒன்னுன்னாலோ, தங்கச்சிக்கு ரெண்டுன்னாலோ ரெண்டுல ஒன்னு பாக்குற கை தனுஷ். ஆனா வெளில கைப்புள்ள ரேஞ்சிற்கு அமைதியா பாஸ்புட் கடை வச்சி பொழைக்கிறாரு. இப்படியான அவரோட ஜீவனத்துல குறுக்கால வருது ஏரியாவின் பெரிய கைகள் ஆன சரவணன் & எஸ்.ஜே. சூர்யா டீம். அதுக்கான காரணமா தன்னோட தம்பியும் இருப்பதால பாஸ்புட் முதலாளி மாஸ்காட்டச் செல்கிறார். அந்த மாஸின் முடிவு பாஸா? நாம க்ளோஸா? என்பது ராயனின் மீதிக்கதை

தனுஷ் போயஸ்கார்டனில் வீடுகட்டியும் எளிமையாக வாழ்ந்து வரும் ரஜினி போல..ஸாரி தர்மதுரை ரஜினி போல அடக்கி வாசித்தும், இடைவேளைக்குப் பின் வர்மக்கலை கமல் போல பிரித்து மேய்ந்தும் நடித்துள்ளார். துஷாரா மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த, எப்போதும் ஏழரையை இழுத்து வரும் சந்தீப் கிஷன் ஓகே ரகமாக நடித்துள்ளார். பூதத்தை கண்டால் பம்மும் குழந்தை போல முகம் கொண்ட காளிதாஸ் காலியாகும் வரை நல்ல நடிப்பை கொடுக்க முயற்சித்துள்ளார். கெஸ்ட் அப்பீரியன்ஸ் என்ற டைட்டில் வரலெட்சுமி சரத்குமாருக்கு. அதை பிரகாஷ்ராஜுக்கும் போட்டிருக்கலாம். நான்கு நாள் கால்ஷீட்டிலே அவர் சோலி முடிந்தது. எஸ்.ஜே சூர்யா ட்ரேட்மார்க் அப்படியே இதிலும். இன்னும் நாலு படத்தில் அவரும் இப்படியே அதட்டி மிரட்டி நடித்தால் காலை அகட்டி வீட்டில் இருக்க வைத்துவிடுவார்கள். ஏன்னா அவருக்கு தியேட்டர்ல பெருசா ரெஸ்பான்ஸ் கிடைக்கலே. செல்வராகவன் கேரக்டர் ஆங்காங்கே நல்லா வொர்க்கவுட் ஆகியிருக்கு. அபர்ணா பாலமுரளி அப்பப்ப கத்தியை சொறுகிற மாதிரி நன்றாக நடித்துள்ளார்

ஓம்.பிரகாஷின் ஒளிப்பதிவு செகண்ட் ஹீரோ என்றால் ஏ.ஆர்.ரஹ்மானை படத்தின் முதல் ஹீரோ எனலாம். மனிதர் பின்னிட்டார். நின்னுட்டார். அடுத்ததாக படத்தின் திரைமொழியாளர் தனுஷ். ரைட்டிங்காக மிகவும் பழைய கதை ஒன்றையே எழுதியுள்ளார். வசனங்களில் நல்ல கூர்மையும் நேர்மையும் இருப்பது ஓகே தான். துஷாரா கேரக்டரை வடிவமைத்த விதம் அப்ளாஸ் ரகம். ஆனால் திரைக்கதையாசிரியர் தனுஷ் பின்பாதியில் மொத்தமாக கோட்டைவிட்டுள்ளார்.

தமிழ்சினிமாவில் அஜித்-ஐ விட ஒரு படத்திலே அதிக துரோகங்களை காண்கிறார் தனுஷ். அது ஓகே தான். ஆனால் அதுக்கான காரணத்தை இவ்ளோ வீக்-ஆகவா பாஸ் வைப்பீங்க. எமோஷ்னலுக்கான காரணங்கள் வீக் என்பதால் அது சம்பந்தப்பட்ட காட்சிகள் நமக்குள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதனால் இந்த காத்தவராயன் நம்மை காப்பாற்றாமல் போகிறான்

தனுஷின் தீவிர ரசிகர்கள் நீங்கள் என்றால் உங்களை இந்த ராயன் காப்பாற்ற வாய்ப்புண்டு

Then தனுஷ் அடுத்தபடம் ஆடியோ லான்ச்-ல் பேசுவதற்காக நம்மால் முடிந்த Content help

“நான்லாம் படம் எடுக்கவே கூடாதா? காலம் பூராம் வெற்றிமாறன் படம் தவிர ஏனைய மோசமான படங்கள்ல நடிச்சிட்டு மொக்கை வாங்கிட்டே இருக்கணுமா?” இப்படி பேசுங்க D sir.

அப்பதான் அடுத்த வாட்டி எஸ்.ஜே.சூர்யா உங்கட்ட, “ஏன் சார் டைரக்ட் பண்றீங்க” ன்னு கேட்கமாட்டார்

2.5/5
-தமிழ் வெண்பா