ஒரு சாதாரண கூலித்தொழிலாளி எப்படி செம்மர கடத்தல்காரனாக மாறுகிறான் என்பதே புஷ்பாவின் கதை
புஷ்பராஜ் என்ற புஷ்பா கேரக்டரில் அல்லு அர்ஜுன் முதல்முறையாக தரை லோக்கலாக இறங்கி நடித்திருக்கிறார். தெலுங்கில் அவரது வசன உச்சரிப்பும் பாடி பாடிலாங்குவேஜும் நல்லாவே எடுபட்டிருக்கிறது. ஆனால் தமிழில் சென்னைத் தமிழ் உச்சரிப்பும், பாடிலாங்குவேஜும் மிகவும் செயற்கையாக இருக்கிறது. ஆக்ஷன் டான்ஸ் இரண்டிலுமே அல்லு அர்ஜுன் அல்லு சில்லு கிளப்புகிறார்.
ராஷ்மிகா மந்தனா கதையில் ஓரளவு பயன்படுத்தப் பட்டிருப்பது ஆறுதல். ஒரு பாடல் தான் என்றாலும் சமந்தா கெத்து. வில்லன்களாக வரும் யாவரும் கொடுத்த அளவைத் தாண்டாமல் அசத்தி இருக்கிறார்கள். கடைசி நேரத்தில் பகத்பாசில் என்ட்ரி ஆகிறார். அவர் வந்தபின் திரையில் அனல் பறக்கிறது. சின்ன சின்ன அசைவுகளிலும் அசத்தியிருக்கிறார் பகத்பாசில்.படத்தில் பெரிய எனர்ஜி தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை தான். சாமி, ஸ்ரீவள்ளி, உம் சொல்றீயா மாமா ஆகிய பாடல்கள் உள்பட பின்னணி இசையும் ஆகத்தரம்
பரபரவென்று நகர வேண்டிய படம் பல இடங்களில் மெல்லநடை போடுகிறது. அதற்கான பெரிய காரணம் படத்தின் நீளம். மேலும் படத்தில் எமோஷ்னல் கனெக்டிங் என்பது எங்குமே இல்லை. மெயின் கதாப்பாத்திரம் நியாயப்பாதையில் பயணிக்காததால் அவர் காட்டும் மாஸ் மீது பெரிய கிரேஸ் வரவில்லை. டப்பிங் சிங், நேம் போர்ட்கள், போனில் வரும் கஸ்டமர் குரல் உள்பட தமிழுக்காக படத்தில் எங்குமே மெனக்கெடவில்லை. அதுசரி கதையவே அப்படித்தான் அணுகியிருக்கிறார் இயக்குநர் சுகுமார். படத்தின் விஷுவல் மட்டும் மாஸாக இருக்கிறது. அதனால் படத்தை ஒருமுறை திரையில் காணலாம்
-மு.ஜெகன் கவிராஜ்