தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமாகி இன்று மொழிகளைத் தாண்டி பல ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் அல்லு அர்ஜுன். கொரோனா வைரஸ் நிவாரண தொகையாக ரூபாய் 1.25 கோடியை மத்திய மாநில அரசுகளுக்கும், கொரோனா வைரஸ் பரவலால் வேலை இழந்து வாடும் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு 25 லட்சமும் வழங்கி அனைத்து ரசிகர்களின் நன்மதிப்பையும் பெற்றவர் .
நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர் நடிக்கும் “புஷ்பா” படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. தமிழ் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் எப்போது நடிப்பார் என்று எதிர்பார்த்த தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு இச்செய்தி மகிழ்ச்சியளித்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனரான சுகுமார் இப்படத்தை இயக்குகிறார். இவர் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஆர்யா மற்றும் ஆர்யா 2 என இரு வெற்றிப் படங்களை இயக்கியவர். நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் இணையும் மூன்றாவது படம் “புஷ்பா” .