Tamil Movie Ads News and Videos Portal

புஷ்பா2- விமர்சனம்

புஷ்பா2- விமர்சனம்

புஷ்பா2 தி ரூல் ரசிகர்களை எப்படி டீல் செய்கிறது?

புஷ்பா முதல் பாகத்தில் செம்மரக் கடத்தல் காரனாக சிம்மசானம் ஏறிய அல்லு அர்ஜுன், இந்தப்பாகத்தில் அரசியல் சிம்மாசனத்தை மாற்ற முயல்கிறார். அந்த முயற்சியில் வெற்றி கிடைத்ததா? என்பதே படத்தின் கதை

அல்லு அர்ஜுன் நெருப்புப் பொறியாக தெறிக்க விடுகிறார். சண்டைக்காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் முயற்சி எல்லாமே, படத்திற்கு ஆகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ராஷ்மிகா மந்தனா, நடிப்பிலும், கவர்ச்சியிலும், ஏராளனமான தாராளம் காட்டியுள்ளார். பகத்பாசில் வழக்கம் போல் தன் இருப்பை ஸ்ட்ராங்காக உறுதி செய்துள்ளார். ஆடுகளம் நரேன், ஜெகபதிபாபு உள்பட பலரும் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளனர்

சுகுமார் மண்டைக்குள் வைத்திருந்த எல்லா ப்ரேம்களையும் கேமராமேன் கச்சிதமாக திரையில் காண்பித்துள்ளார். இந்திய சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சம் எனச் சொல்லும்படி ஒளிப்பதிவு அமைந்துள்ளது. சண்டைக்காட்சிகள் எல்லாமே ஆகத்தரமாக உருவாக்கப்பட்டுள்ளது. சாம்.சி எஸ் கூடுதல் பின்னணி இசையை வழங்கியுள்ளார். Good one. பாடல்களில் TSP இன்னும் ஸ்கோர் செய்திருக்கலாம்

வறுமையை ஜெயிக்கும் கடத்தல் காரனின் வளர்ச்சியை முதல்பாகத்தில் காட்டிய சுகுமார், இந்த சீக்வென்ஸில் வேறோர் தளத்தில் பயணித்து ரசிகர்களுக்குத் தீனி போட்டுள்ளார். நீளமான படம் என்றாலும், பரபரவென பாயும் திரைக்கதையால், ரசிகன் சோர்வடையவே இல்லை

So Wild fire தான்

3/5
-வெண்பா தமிழ்