உலகளவில் வெஃப் சீரிஸ் மிகப்பிரம்மாண்டமான தளமாக மாறி வருகிறது. முன்னணி நட்சத்திரங்கள் பலரும் முன்னணி இயக்குநர்கள் சிலரும் ஏற்கனவே வெஃப் சீரிஸில் படங்களை இயக்கத் தொடங்கிவிட்டனர். அந்த வரிசையில் தற்போது ‘ஓரம் போ’ ‘வ குவாட்டர் கட்டிங்’ ‘விக்ரம் வேதா’ போன்ற படங்களை இயக்கிய புஷ்கர் காயத்ரி இணையும் வெஃப் சீரிஸ் இயக்கவிருக்கின்றனர்.
மிகப்பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகவிருக்கும் இந்த வெஃப் சீரிஸில் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர். இவர்கள் மூவருக்குமே வெஃப் சீரிஸ் அறிமுகம் இதுதான். இந்த வெஃப் சீரிஸின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கவிருக்கிறது.