Tamil Movie Ads News and Videos Portal

”பஞ்சாபி கணவர் நன்றாக பார்த்துக் கொள்வார்” – ஸ்ரீரெட்டியின் அடுத்த வெடி

தெலுங்கு நடிகர்கள்,, இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் மீது பாலியல் குற்றச்சாட்டு. பின்னர் தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதும் அதே குற்றச்சாட்டு. இடையில் அரை நிர்வாணப் போராட்டம். இப்படி எப்பொழுதுமே பரபரப்புக்கு பெயர் போனவர் நடிகை ஸ்ரீரெட்டி. உலகமே கண்ணுக்குத் தெரியாத வைரஸிற்கு பயந்து உறைந்து போய் இருக்க, இவர் இந்த சூழலிலும் இவரின் விளையாட்டை விட்டது போல் தெரியவில்லை. சில தினங்களுக்கு முன்னர் நடிகை அமலாபால் பஞ்சாபி பாடகர் பவ்னிந்தர் சிங் என்பவரோடு மெளத் கிஸ் கொடுக்கும் புகைப்படம், மற்றும் அவர்கள் திருமணம் செய்து கொண்டது போன்ற பின்னணி கொண்ட புகைப்படங்கள் வெளியானது.

இதனால் நடிகை அமலாபால் மறுதிருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் பரவியது. இதை மறுத்த நடிகை அமலாபால், அது ஒரு போட்டோ ஷூட்டிற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று விளக்கம் அளித்தார். தற்போது இந்த விசயத்தில் சர்ச்சையை ஏற்படுத்துவது போல் ஸ்ரீரெட்டி ஒரு பதிவிட்டுள்ளார். அதில், “கவலைப்படாதீர்கள் அமலாபால். உங்களது பஞ்சாபி கணவர் உங்களை நன்றாக பார்த்துக் கொள்வார். பஞ்சாபிகள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.” என்று தேவையின்றி அமலாவை வம்புக்கு இழுத்துள்ளார் ஸ்ரீரெட்டி.