Tamil Movie Ads News and Videos Portal

சூப்பர் ஸ்டாருக்கு S.P.சௌத்ரி சொன்ன பன்ச் வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது சாதாரண ரசிகன் முதல் திரையுலக பிரபலங்கள் வரை அவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றனர் அப்படி ஒரு தீவிர ரஜினி ரசிகர் தான் பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆன S.P.சௌத்ரி இவர் தற்போது நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் டகால்டி என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு,

ஏறுபவனுக்கு இமயமலை

எதிர்ப்பவனுக்கு எரிமலை

இந்த அண்ணாமலை

என்கிற செம பஞ்ச் வசனத்துடன் தனது மனம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்றைய அரசியல் சூழலில், தலைவரை எதிர்க்கும் அரசியல் வாதிகளுக்கு பதிலடி, தலைவர் பாணியில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்..