Tamil Movie Ads News and Videos Portal

PT sir- விமர்சனம்

ஒரு அமைதியான வாத்தியார் புயலாக மாறும் கதை

ஹீரோ ஆதி ஈரோடு தனியார் கல்லூரியில் ஆசிரியராக இருக்கிறார். எந்த வம்பு தும்புக்கும் போகாத அவருக்கு, கல்லூரியில் ஒரு காதலும் இருக்கிறது..அந்த காதல் கைகூடும் சமயத்தில் ஆகப்பெரும் திருப்பம் ஒன்று கதையில் நிகழ்கிறது. அதுவரை அமைதியாக இருந்த ஹீரோ போராட்டத்தை நோக்கிச் செல்கிறார். போராட்டத்தின் முடிவு என்ன என்பதே படத்தின் மீதிக்கதை

ஆதி ஜோதியாக ஜொலிக்கவில்லை என்றாலும் பாதிக்கிணறுக்கு மேல் நடிப்பில் தாண்டிவிட்டார். எமோஷ்னல் காட்சிகளில் யூட்யூப் சாயல் மாடுலேசனை தவிர்த்திருக்கலாம். நாயகி கொடுத்த வேலையை குறைவின்றிச் செய்துள்ளார். தியாகராஜன் முதற்கொண்டு படத்தில் நடித்துள்ள யாவரும் பெரிதாக தவறு செய்யவில்லை

நான்கு வருடங்களுக்குப் பின் இசை அமைத்திருந்தாலும் பாடல்கள் மூலமும் பின்னணி இசை மூலமும் தன்னை நிரூபத்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி. ஒளிப்பதிவில் பல காட்சிகளை குவாலிட்டியாக்கி நம் கண்களுக்குத் தந்துள்ளார் ஒளிப்பதிவாளர்

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் நிறைய நல்ல நல்ல கருத்துக்களை பேசியுள்ளது. மேலும் உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்களின் வலியை வலிந்து திணிக்காமல் பேசியிருப்பதும் படத்தின் கூடுதல் ப்ளஸ்

கவனித்தும் கவனிக்காமலும் சில இடங்கள் நம்மை டிஸ்டர்ப் செய்கின்றன. அவற்றை ப்ரேடில் இருந்து தூக்கியிருந்தால் பர்ஸ்ட் கிரேடு வந்திருப்பார் இந்த PT Sir
3/5
-மு.ஜெகன் கவிராஜ்