இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யாமேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் த்ரில்லர் திரைப்படம் “சைக்கோ”. இப்படத்தின் டிரைலரும் இளையராஜா இசையமைப்பில் உருவான பாடல்களும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இத்திரைப்படம் முதலில்
டிசம்பர் 27ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்திருப்பதாக தெரிகிறது. படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27 ம் தேதி வெளியாகும் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் விடுமுறையை ஒட்டி ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் தர்பார் மற்றும் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் பட்டாஸ் ஆகியப் படங்கள் வெளியாகவிருப்பதால், அவற்றின் வெளியீட்டிற்குப் பின்னர் “சைக்கோ” திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.