Tamil Movie Ads News and Videos Portal

அமிதாப்பச்சன் பிறந்த நாளுக்கு வித்தியாசமாக வாழ்த்திய பட குழு!

பாலிவுட் திரையுலகின் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனின் எண்பதாவது பிறந்தநாளான நேற்று, ‘புராஜெக்ட் கே’ படக்குழுவினர் பிரத்யேகமான போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் வலிமையை உணர்த்தும் வகையில், அவருடைய முஷ்டி மடக்கிய கையை மட்டும் தனித்துவத்துடன் வடிவமைத்து போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். அதனுடன் ‘அழியாத தன்னிகரற்ற சாதனையாளர்’ என்ற வாசகத்தையும் இடம்பெற வைத்து வாழ்த்திருக்கிறார்கள்.இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பான் இந்திய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘புராஜெக்ட் கே’. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தயாரிப்பில் இருக்கும் இந்த படத்தில் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரித்து வருகிறார்.

#AmitabhBachchan #அமிதாப்பச்சன்