திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தில் முக்கியப்பொறுப்பில் உள்ள திருப்பூ சுப்பிரமணியன் ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் இருக்கும் தகவல் திரையுலகில் பலரை ஆச்சர்யப்பட வைக்கும்..சிலரை அதிர்ச்சி அடைய வைக்கும். சூப்பட் குட் பிலிம்ஸ் செளத்ரி மற்றும் திருப்பூர் சுப்பிரமணியன் இருவரும் ஒரு படத்தைத் தயாரிக்க இருக்கிறார்கள். இப்படத்தில் விஜய்சேதுபதி கெளரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார். படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்குகிறார். மிக முக்கியமாக இந்தப்படத்தில் பங்குபெறும் அனைவருக்கும் சதவிகித அடிப்படையில் தான் சம்பளமாம். இதற்கு நடிகர்கள் சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் உடன்பட்டுள்ளார்கள். இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் ஓ.கே சொல்லி இருக்கிறாராம். ஆக இது தமிழ்சினிமாவில் ஒரு நல்ல முன்னெடுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
சதவிகித அடிப்படையில் சம்பளம் என்றால் என்ன?
அதாவது கே.எஸ் ரவிக்குமாருக்கு பத்து சதவிகித சம்பளம் என்று வைத்துக்கொள்வோம். படம் பத்துக்கோடி ரூபாய் வியாபாரம் ஆனால் ஒரு கோடி ரூபாய் சம்பளமாகத் தரப்படுமாம். மேலும் இப்படம் ஒன்லி தியேட்டர் ரிலீஸ் தானாம். செம்ம ஐடியால்ல