தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமி@முரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி சார்பாக சிவசக்தி பாண்டியன், R.K.சுரேஷ் டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி சார்பில் P.T.செல்வகுமார், அடிதடி முருகன் போட்டியிடுகின்றனர் இவர்களை தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், இரண்டுதுணை தலைவர் பதவிக்கு சுயேச்சையாக சிங்காரவேலன், கதிரேசன், மதியழகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்
தலைவர் பதவியை காட்டிலும் துணை தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவுகிறது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளராக ஏற்கனவே பதவியில் இருந்தவர் கதிரேசன் இவர் பொறுப்பில் இருந்த காலத்தில் சங்க வளர்ச்சிக்கு, உறுப்பினர்கள் நலனுக்காக எந்த முன்முயற்சியும் எடுக்காதவர் என்கிற அதிருப்தி தயாரிப்பாளர்கள் மத்தியில் நிலவுகிறது
இராம நாராயணன் தலைவராக இருமுறை பதவியில் இருந்த போது செயலாளராக பதவியில் இருந்தவர் சிவசக்தி பாண்டியன் அவரது பதவி காலத்தில் உறுப்பினர்கள் சம்பந்தபட்ட பிரச்சினைகளை சமரசம் இன்றி அணுகியவர் எவருக்கும் பாதிப்பு இன்றி சமரச தீர்வுகாண முயற்சித்தவர் என்கிற நற்பெயர் தயாரிப்பாளர்கள் மத்தியில் உள்ளது கடந்த ஐந்தாண்டுகளில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு இவரை பற்றி அதிகம் தெரியாதது இவருக்கு பலவீனமாக உள்ளது
P.T.செல்வகுமார், அடிதடி முருகன் இருவரையும் அனைவருக்கும் தெரிந்தாலும் இவர்களுக்கான ஆதரவு அலை தனிப்பட்ட முறையில் இல்லை அணியின் சார்பில் கிடைக்க கூடிய வாக்குகள் இவர்கள் இருவரையும் கடும் போட்டியாளராக களத்தில் நிறுத்தவில்லை
நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக தன்மை கொண்ட R.K.சுரேஷ் கடும் போட்டியாளராக களத்தில் உள்ளார் எப்படியும் வெற்றிபெற்றாக வேண்டும் என்கிற முனைப்புடன் தனிப்பட்ட முறையில் வாக்களர்களை சந்தித்து வருகிறார்
துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் 7 வேட்பாளர்களில் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பி வருகிறார் சுயேச்சையாக போட்டியிடும் சிங்காரவேலன் வாக்காளர்களை நேரடியாக சந்தித்து வரும் இவர் எனக்கு ஓட்டளிப்பதற்கு உங்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன் அனைவரது நலனுக்காக போராடுவேன் முதல்முறையாக போட்டியிடும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் இவருக்கு ஆதரவு அலையை ஏற்படுத்தியுள்ளது என கூறப்பட்டுவரும் நிலையில் அவருடன் பேசியபோது
சங்க தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கம்
கடந்த காலங்களில் பொறுப்பில் இருந்தவர்கள் குறிப்பாக கதிரேசன், கலைப்புலிதாணு இருவரும் சங்கத்துக்கு வர வேண்டியவருமானத்தை மடைமாற்றிவிட்டதையும், சங்கத்தின் உரிமைகள், கௌரவம் பறிபோன போது தடுக்காமல் கள்ள மௌனம் சாதித்தை ஆதாரபூர்வமாக நான்வெளியிட்டேன் அதனால் காவல்துறையில் என் மீது கலைப்புலிதாணு புகார் செய்தார் வெளியில் இருந்து பேசுவதைவிட தேர்தல் களத்தில் வேட்பாளராக பேசுவது சரியாக இருக்கும் என்பதால் போட்டியிடுகிறேன்
தேர்தல் களத்தில் ஜாம்பவான்கள் போட்டியிடுகிறபோது உங்களை போன்ற புதியவர்கள் வெற்றிபெற முடியுமா?
நியாயமான கேள்விதான் ஜாம்பவான்களை கண்டு ஒதுங்கிபோனால் புதியவர்கள் எப்போதுதான் பொறுப்புக்கு வருவது எனது நோக்கம், தயாரிப்பாளர்கள் சங்க வளர்ச்சிக்காக நான் முன்வைக்கும்வரைவு திட்டம் எனக்கு வெற்றியை தரும் என நம்புகிறேன்
தயாரிப்பாளர்கள் சங்க நலனுக்காக என்ன திட்டம் வைத்திருக்கின்றீர்கள்
நிழல் பட்ஜெட் ஒன்றை வரும் வெள்ளிக்கிழமை வெளியிட இருக்கிறேன் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் எந்த அணியும் இது போன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டதில்லை என்கிற வடிவத்தில்,
தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வருடத்திற்கு 50 கோடி அளவிற்கு வருமானம் கிடைக்ககூடிய திட்ட வரைவு அறிக்கையாக அது இருக்கும் அறிக்கை வெளியான பின்பு வாக்காளர்களின் கவனம் என் பக்கம் திரும்பும்
இதுவரை தயாரிப்பாளர்கள் மத்தியில் தங்களுக்கு எந்த அளவில் வரவேற்பு உள்ளது
சிங்காரவேலன் ஆர்வக்கோளாறில் போட்டியிடுவதாகவே தயாரிப்பாளர்கள் கருதினார்கள் வாக்கு கேட்டு சென்றபோது எனது அணுகுமுறை, ஆக்கபூர்வமான திட்டங்கள் அதனை அமுல்படுத்த நிதி வரவுக்கான திட்டமிடல் ஆகியவற்றை கேட்டபோது தயாரிப்பாளர்கள் மத்தியில் பிரமிப்பு உண்டானது” இவ்வளவு நாளா எங்கய்யா இருந்த” என கேட்க தொடங்கினார்கள்
இது கொஞ்சம் ஓவராக இருக்கிறதே நமக்கு நாமே திட்டம் போல் உங்களை நீங்களே பில்டப் செய்துகொள்கிறீர்களா ?
இல்லை தன்னம்பிக்கைதானே வாழ்க்கை தனி ஆளாக எந்த அணியின் ஆதரவும் இல்லாமல் தேர்தல் பணியை தொடங்கினேன் இப்போது எனக்காக நூற்றுக்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் வாக்கு கேட்டு வருகின்றனர் எனது நிழல் பட்ஜெட்டை வெள்ளிக்கிழமை வெளியிடும்போது எனக்கான ஆதரவு விஸ்வரூபமாக வெளிப்படும் என்றார் சிங்காரவேலன்