‘எட்டுத் தோட்டாக்கள்’ படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் ஸ்ரீகணேஷ் தற்போது அதர்வா, ப்ரியா பவானி சங்கர், ராதிகா, ராதாரவி மற்றும் பலர் நடிப்பில் ‘குருதி ஆட்டம்’ படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. இப்படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் ஸ்ரீகணேஷ் இப்படத்தில் பேபி திவ்யதர்ஷிணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அவரது கதாபாத்திரம் படத்தில் மிகவும் பெரிதாகப் பேசப்படும்.
அதுபோல் நாயகி ப்ரியா பவானி சங்கர் தமிழ்ப் பேசத் தெரிந்த நடிகை. அவர் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் இனி வரக் கூடியப் படங்கள் அவருக்கு மிகப் பிரம்மாண்டமான இடத்தை அவருக்குப் பெற்றுத் தரும்.” என்று பாராட்டியுள்ளார்.