விஜய் தேவரகொண்டா படத்தின் ரீமேக்கில் ப்ரியா பவானி சங்கர்
2016ம் ஆண்டு தருண் விஜய் இயக்கத்தில் அர்ஜூன் ரெட்டி நாயகன் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான திரைப்படம் “பெல்லி சூப்புலு”. இப்படம் அந்த ஆண்டிற்கான சிறந்த தெலுங்குப்படம், சிறந்த திரைக்கதை ஆகியவற்றிற்கான தேசியவிருதை வென்றதோடு, சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகைக்கான ஆந்திர அரசினி விருதையும் வென்றது. மேலும் வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யான் மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடிக்கவிருக்கின்றனர். தெலுங்கில் ப்ரியா நடிக்கும் வேடத்தில் ரீத்து வர்மா நடித்திருந்தார். இப்படத்தை ஏ.எல்.விஜயிடம் இணை இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் சுந்தர் இயக்குகிறார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.