Tamil Movie Ads News and Videos Portal

“கைதி” ஜார்ஜ் மகன் அறிமுகமாகும் “தூங்கா கண்கள்”

70 வருடங்களுக்கு முன் திருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படயாக வைத்து உருவாகியிருக்கும் படம் “தூங்கா கண்கள்”. இந்த திரைப்படத்தில் இதுவரை தமிழ் சினிமா பார்க்காத ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது. தென் தமிழகத்தில் “வாதை” என்று அழைப்பார்கள். இந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து சஸ்பென்ஸ், திரில்லர், ஹாரர் கலந்து த.வினு உருவாக்கியிருக்கும் படம் “தூங்க கண்கள்”.

இந்த படத்தில் ஜார்ஜ் மகன் பிரிட்டோ அறிமுகமாகிறார். “கைதி” புகழ் ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். களவாணி துரை சுதாகர், நிக்கேஷ், த.வினு, ஹாலோ கந்தசாமி, காஞ்சனா ரமேஷ், டாக்டர் பிரபு ஆகியோருடன் அப்ஷரா, ரேஷ்மா கேரளா புதுவரவுகள் நாயகிகளாக அறிமுகமாகிறார்கள்.

செங்கோட்டை, நாகர்கோவில், சென்னை மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

ஒளிப்பதிவு: இமயவன்
இசை: இளங்கோ கலைவாணன்
பாடல்கள்: நிமேஷ்
எடிட்டிங்: ஏ.எல்.ரமேஷ்
சண்டை: திரில்லர் முமேஷ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் த.வினு.