சென்ற ஆண்டு ஹிந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதோடு, தேசிய விருதையும் தட்டிச் சென்ற படம் “அந்தாதுன்”. இப்படத்தில் ஆயுஸ்மான் குரானா பார்வையற்ற இளைஞர் வேடத்தில் நடித்திருந்தார். ராதிகா ஆப்தே, தபு போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்தின் ரீமேக் உரிமையை தியாகராஜன் வாங்கியிருந்தார்.
இதனால் அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே இப்படத்தில் பிரசாந்த் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும் இப்படத்தை ‘ஜெயம்’ ‘தனி ஒருவன்’ ஆகியப் படங்களை இயக்கிய இயக்குநர் மோகன்ராஜா இயக்கவிருக்கிறார். ஏற்கனவே தெலுங்கில் வெளியாகி ஹிட்டான படங்களை தன் தம்பி ஜெயம் ரவிக்கு தமிழில் ரீமேக் செய்த அனுபவம் இவருக்கு இருக்கிறது என்பதால், இவரது கை வண்ணத்தில் அந்தாதுன் பிரசாந்திற்கு ஒரு திருப்புமுனை படமாக அமையும் என்று நம்பலாம்.